தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியை மீது குற்றச்சாட்டு

தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியை மீது குற்றச்சாட்டு

வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

குறித்த ஆசிரியையின் தாக்குதல் காரணமாக மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முதலாம் ஆண்டில் கற்கும் மாணவனை புல்லாங்குழல் போன்ற உபகரணத்தினால் தலையில் தாக்கியதாக அந்த மாணவன் கூறியதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தலையில் காயத்துக்கு உள்ளான சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டுநாள் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது வீடு திரும்பி உள்ளார்.

தமிழர் பகுதி பாடசாலை ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியை மீது குற்றச்சாட்டு | Vavuniya School Boy Attacked By Teacher

அதேவேளை அந்த ஆசிரியை தொடர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் ஆளுநர் செயலகத்திற்கும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியை வவுனியா பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

GalleryGallery