தென்னிலங்கையில் அரச அலுவலகத்தில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்

தென்னிலங்கையில் அரச அலுவலகத்தில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்

தென்னிலங்கையில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் உயர் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்தில் மோசடி செய்த பெண்ணே விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் கடமை அதிகாரி, களுத்துறை போமுவல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணும், ஓட்டுநர் வாத்துவை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரும் ஆவர்.

12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நிதியை மோசடி செய்ததாக, களுத்துறை பிரதேச சபையின் செயலாளர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்னிலங்கையில் அரச அலுவலகத்தில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் | Womens Biggest Money Fraud In Sri Lanka

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கு விபரங்களின் பகுப்பாய்வு மூலம், சம்பளக் கணக்குகளில் முறைகேடு செய்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சந்தேகநபர்கள் இருவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.