வாகன பற்றாக்குறைக்கு தீர்வு: 2000 கெப்கள் இறக்குமதி

வாகன பற்றாக்குறைக்கு தீர்வு: 2000 கெப்கள் இறக்குமதி

இரண்டாயிரம் கெப்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சில அரச திணைக்களங்களுக்கு சுமார் 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், இதன் விளைவாக அதிகாரிகள், குறிப்பாக களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

வாகன பற்றாக்குறைக்கு தீர்வு: 2000 கெப்கள் இறக்குமதி | Sri Lanka To Import 2 000 Cabs For Government Use

அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் சந்தன அபேரத்ன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.