
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் - ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் ஒரு கொள்கலன் பிரைம் மூவர் வாகனத்தின் மீது விழுந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு துறைமுக கொள்கலன் முற்றத்தில், ஒரு பிரைம் மூவர் வாகனத்தின ஒரு கொள்கலனை ஏற்றிச் சென்றபோது, மற்றொரு கொள்கலனுடன் மோதி பிரைம் மூவர் வாகனத்தின் மீது விழுந்தது.
நேற்று நடந்த விபத்தில், பிரைம் மூவரின் ஓட்டுநர் பலத்த காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெடிகமவை சேர்ந்த 36 வயதுடையவராகும். கொள்கலனை ஏற்றிச் சென்ற இயந்திர இயக்குநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.