இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர்

இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர்

இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரே தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர் | Srilankan Police Brutality Person Intensive Unit

பளை - வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரை புலனாய்வாளர்கள் அழைத்து செல்ல முற்பட்டதாக தெரியவருகின்றது.

இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர் | Srilankan Police Brutality Person Intensive Unit

அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கி விட்டு தப்பித்துள்ளனர்.

இந்நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.