ஃபெமினிலி டி பலேர்மோ டென்னிஸ்: இரண்டாவது சுற்றில் அனெட் கொன்டாவிட் வெற்றி

ஃபெமினிலி டி பலேர்மோ டென்னிஸ்: இரண்டாவது சுற்றில் அனெட் கொன்டாவிட் வெற்றி

பெண்களுக்கே உரித்தான ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றில் அனெட் கொன்டாவிட் வெற்றிபெற்றுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவிட், ரோமேனியாவின் பாட்ரிசியா மரியா டிங்கை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டில், சிறப்பாக விளையாடிய அனெட் கொன்டாவிட், செட்டை 6-3 என கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அனெட் கொன்டாவிட், செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.