அரச நிறுவனங்களின் சட்ட, ஒழுங்கு விதிகளை மாற்ற பொது மக்களுக்கு வாய்ப்பு

அரச நிறுவனங்களின் சட்ட, ஒழுங்கு விதிகளை மாற்ற பொது மக்களுக்கு வாய்ப்பு

அரசாங்கத்தின் அபிவிருத்திக் கொள்கைகள் சார்ந்த தேவைப்பாடுகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் அரச சேவையுடன் தொடர்புடையதாக நிலவுகின்ற சட்ட, ஒழுங்கு விதிகளை மீளாய்வுக்குட்படுத்தி இலகுபடுத்துவதற்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளது.


பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு பொது மக்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, 

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் போன்ற உள்ளுராட்சி நிறுவனங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் (இலக்கம்: அப /25/0175/816/008, 2025.02.10 ஆம் திகதிய) கிடைத்துள்ளது. 

இந்த சீர்திருத்தங்களின் நோக்கம், மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக நிறுவனங்களின் செயற்பாட்டுடன் தொடர்புடைய சட்ட, ஒழுங்குவிதிகளை இலகுபடுத்தி அதனூடாக பொது மக்களுக்கான சேவைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றியமைப்பதாகும். 

எனவே, இந்த செயற்பாட்டை சிறப்பான வகையில் மேற்கொள்வதற்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையில் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகப் பொறிமுறையானது பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தின் கட்டளைச் சட்டங்கள் மற்றும் 1950 முதல் 1970 வரையான காலப் காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் நடைமுறைகளுக்கமையவே இதுவரை செயற்படுத்தப்படுகின்றது. 

அன்று நிலவிய சமூக, பொருளாதார, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் உட்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் இந்த நடைமுறைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், தற்போதைய அபிவிருத்தித் தேவைகள் மற்றும் பொது மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்கு இந்த நடைமுறைகள் காலத்திற்கேற்ப திருத்தியமைக்கப்பட வேண்டியுள்ளது. 

உங்களுடைய கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை எமக்கு அனுப்பி வையுங்கள்! 

இந்த அமைச்சின் விடயப் பரப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் நிலவுகின்ற கீழ் குறிப்பிடப்படும் நிறுவனங்களுடாக நீங்கள் பெற்றுக்கொள்ளுகின்ற அரச சேவைகள் தொடர்பில் உங்களால் அவதானிக்கப்பட்ட சட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நடைமுறைகள் சார்ந்த சிக்கல்கள், அந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான உங்களுடைய கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை எமக்கு அனுப்பிவைக்குமாறு தயவாய் கோருகின்றேன். 

தொடர்புடைய அரச நிறுவனங்கள் : 

மாவட்ட செயலகங்கள் 

பிரதேச செயலகங்கள் 

மாநகர சபைகள் 

நகர சபைகள் 

பிரதேச சபைகள் 

பதிவாளர் நாயகம் திணைக்களம் 

ஓய்வூதியத் திணைக்களம் 

உங்களுடைய கருத்துக்கள் முன்மொழிவுகளை அனுப்புவதற்கு முடியுமான வழிகள்: 

மின்னஞ்சல் முகவரி : inforar@moha.gov.lk 

Whatsapp : 0740896768 
அஞ்சல் முகவரி: பிரதேச நிர்வாக மறுசீரமைப்புப் பிரிவு, 17 ஆம் மாடி, "நில மெதுர”, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05 

உங்களுடைய கருத்துக்களை அனுப்ப வேண்டிய படிவத்தின் மாதிரி கீழே…

 

 

 

மேலதிக விபரங்களுக்கு :


மேலதிக செயலாளர் (பிரதேச நிர்வாக மறுசீரமைப்பு),
தொ.பே. இல. : 0112050434 / 011 2050430


ஒப்பம்/- செயலாளர்


பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
2025.03.18

மேலும் படங்கள்

more-images