இலங்கை விமானப் படையின் பயிற்சி ஜெட் விமானம் விபத்து

இலங்கை விமானப் படையின் பயிற்சி ஜெட் விமானம் விபத்து

வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட்  விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

 இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் பயிற்சி ஜெட் விமானம் விபத்து | Sri Lanka Air Force Training Jet Crashes

கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்ததன் காரணமாக  வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.