அஞ்சல் திணைக்களத்தில் தேங்கி கிடந்த பார்சல்கள் : பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி

அஞ்சல் திணைக்களத்தில் தேங்கி கிடந்த பார்சல்கள் : பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி

கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத பார்சல்களில் 1 கோடியே 78 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை  இலங்கை சுங்கத்தின் அஞ்சல் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை, நுகேகொடை, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முகவரிகளுக்கு விநியோகிப்பதற்காக பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் இந்தப் பார்சல்கள் வந்தடைந்துள்ளன.

கடந்த 2 வாரங்களில் இதுபோன்ற 20 பார்சல்கள் வந்திருந்தும், அந்த பார்சல்களை யாரும் ஏற்க வராததால், கடந்த 19ஆம் திகதி பார்சல்களை ஆய்வு செய்ய தபால் மா அதிபரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அஞ்சல் திணைக்களத்தில் தேங்கி கிடந்த பார்சல்கள் : பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி | Parcels Stuck Postal Department Drugs Worth Crores

அதன்படி, பார்சலை திறந்து ஆய்வு செய்ததில், 14 பார்சல்களில், 272 கிராம் 'குஷ்' போதைப்பொருள் மற்றும் 2,049 'மெத்தம்படமைன்' மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த போதைப்பொருள் அடையாளம் காணப்பட்டு சான்றளிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.