
ஏடிஎம் இயந்திரத்தை தாக்கிய இளைஞன்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அரச வங்கியின் தானியங்கி இயந்திரத்தை (ATM) தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை, குறித்த வங்கிக்கு 224,750 ரூபாயை செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரியும் பிபில பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்ட பின்னர் அரச வங்கியின் ATM இயந்திரத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.
வங்கிக் கிளையின் முகாமையாளர் அளித்த புகாரை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.