நாட்டின் முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டின் முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) படி, இந்த ஆண்டு பெப்ரவரியில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -3.9 வீதமாக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  

அந்தவகையில், ஜனவரியில், நாட்டின் முதன்மை பணவீக்கம் -4.0 வீதமாக பதிவாகியுள்ளது.

நாட்டின் முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | National Inflation Has Increased A Bit

மேலும், உணவுப் பிரிவில், ஜனவரியில் -2.5 வீதமாக இருந்த பிரதான பணவீக்கம், பெப்ரவரியில் -1.1 வீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, ஜனவரியில் -5.2 வீதமாக இருந்த உணவு அல்லாதவற்றின் பிரதான பணவீக்கம், பெப்ரவரியில் -6.0 வீதமாக ஆகக் குறைந்துள்ளது.