
பெண் வைத்தியர் பலாத்காரம்; விளக்கமறியல் நீடிப்பு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
34 வயதுடைய பிரதான சந்தேக நபர் இன்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.