
அடுத்த 36 மணித்தியாலத்தில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.