வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தமையினால் நபர் ஒருவர் கைது.

வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தமையினால் நபர் ஒருவர் கைது.

ண்டிமாவட்டம் நாவலபிட்டி மத்திய மகாவித்தியாலயத்திற்கு வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பண்டுள்ளார் இந்த சம்பவம் 05.08.2020.புதன்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் நாவலபிட்டி இம்புலுபிட்டி பகுதியை சேர்ந்த 31வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் குறித்த நபர் வாக்களிக்க சென்று குறித்த நபர் வாக்களிப்பதை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்து தேர்தல் கடமையில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர் இனங்கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.