தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 2,200 கண்காணிப்பாளர்கள்- கபே அமைப்பு

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 2,200 கண்காணிப்பாளர்கள்- கபே அமைப்பு

நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 2,200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

நடைபெறுகின்ற பொதுத்தேர்தலில் கபே அமைப்பு மேற்கொள்கின்ற கண்காணிப்பு  நடவடிக்கைகள் தொடர்பாக  கருத்து தெரிவிக்கும்போதே அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நடைபெறுகின்ற பொதுத்தேர்தலில்  நடமாடும் கண்காணிப்பு பணிகளுக்காக 80இக்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை திகாடுமடுல்ல மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் 2 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதாவது கல்முனையில் நேற்று இரவு கட்சியொன்றின் ஆதரவாளர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதைப் போன்று, திகாமடுல்ல பிரதேசத்தில் இன்று காலை, கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.