
மொனராகலை 35%, திருமலையில் 30% வாக்களிப்பு பதிவு – முழு மாவட்ட விபரம் இதோ
நாடு முழுவதும் காலை 10:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் இதுவரை கொழும்பில் 25% வாக்குப்பதிவும், மாத்தறையில் 22% வாக்குப்பதிவும் குருநாகலில் 25% வாக்குப்பதிவும் கண்டியில் 25% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம், காலி ஆகிய மாவட்டங்களில் 20% வாக்குப்பதிவும் புத்தளத்தில் 16% விகித வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் 30%, ஹம்பாந்தோட்டை 24%, கிளிநொச்சி மற்றும் கேகாலையில் 25% வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மொனராகலை 35%, இரத்தினபுரி 24%, பதுளை 25% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.