காத்தான்குடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி- கல்லடி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 61 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றினுள்  வீழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.