வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான காட்சிகளை வெளியிட வேண்டாம் – அரசாங்க தகவல் திணைக்களம்

வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான காட்சிகளை வெளியிட வேண்டாம் – அரசாங்க தகவல் திணைக்களம்

தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் வெளிப்புற மற்றும் உட்புற காட்சிகளை இன்று(புதன்கிழமை) மாலை 5.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம்  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அராசங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாயகம் நாலக்க கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் , “2020  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஊடக செயற்பாடு குறித்த காட்சிகளை ஒளிபரப்பும் பொழுது கீழ் கண்ட வரையறை தொடர்பில் உங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

இதற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், கௌரவ பிரதமர் அவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் சபாநாயகர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் மற்றும் 2020  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்களிக்கும் நிலையங்களுக்கு வருகை உள்ளிட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் காட்சிகள் அல்லது வாக்களிக்கும் காட்சிகள் உள்ளிட்டவை தேர்தல் நடைபெறும் தினத்தன்று வெளியிடுவதற்கு அமைவாக வாக்களிப்பு நிலையங்களின் வெளியே அல்லது உட்பகுதியிலான காட்சிகளை தேர்தல் தினமான 2020 ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு முன்னர் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்”  என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.