கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆக குறைவு

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆக குறைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்களில் 14 பேர் மாத்திரமே IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஆதரவு வழங்கிய அரசாங்கத்திற்கும், வைத்தியர்களுக்கும் தாதிமார்களும், ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தேசிய தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் மார்ச் மாதம் 11ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் இலங்கையில் 6 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகி்றது.

இலங்கையில் தற்போது 299 பேர் நாட்டில் பல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.