மதுபான சாலைகளுக்கு இன்றும் நாளையும் பூட்டு

மதுபான சாலைகளுக்கு இன்றும் நாளையும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும் (புதன்கிழமை) நாளையும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும் என்றும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்தோடு, இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் எனவும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுத்தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.