
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மன்னாரிலும் வாக்களிப்பு
மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.
மன்னாரில் இம்முறை 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்தில் இடம்பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்களித்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் அமைக்கப்பட்ட 76 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றன.
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் கடமைக்காக 700 பொலிஸார் மற்றும் 40 அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்
காலை 7 மணிக்குஆரம்பமான வாக்களிப்புக்கள் மந்தகதியில் இடம்பெற்றபோதும் தற்போது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாக்களித்து வருகின்றனர் என்பதோடு, தேர்தல் தற்போது அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றதென்றும் அவர் தெரிவித்தார்.