தேர்தல் மத்திய நிலையத்தின் முன் வேருடன் சாய்ந்த பெரிய மரம்

தேர்தல் மத்திய நிலையத்தின் முன் வேருடன் சாய்ந்த பெரிய மரம்

திருகோணமலை தேர்தல் மத்திய நிலையமாக விளங்கும் விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக உள்ள பெரிய மரம் வேருடன் சாய்ந்துள்ளது.

நேற்று மதியம் வீசிய காற்றின் காரணமாக இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் திருகோணமலை - கண்டி வீதியூடான பிரதான போக்குவரத்து அரைமணி நேரத்திற்கு மேலாக தடைபட்டது.

தேர்தல் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் தேர்தல் கடமைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை. கடமையில் இருந்த பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மரத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

திருகோணமலை நகரசபை அனர்த்தப் பிரிவு ஊழியர்கள் மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.