சடுதியாக அதிகரித்த இளநீர் விலை

சடுதியாக அதிகரித்த இளநீர் விலை

தற்போது பல பகுதிகளில் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை இருநூறு முதல் இருநூற்று ஐம்பது ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

போதுமான அளவு கையிருப்பிற்கு கிடைக்கததால் சில்லறை விற்பனையை கூட கைவிட்டு விட்டதாக இளநீர் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பல்வேறு நோய்களுக்கு இளநீர் குடிக்குமாறு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள், தங்களுக்குத் தேவையான இளநீரை கொள்வனவு செய்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

சடுதியாக அதிகரித்த இளநீர் விலை | King Coconut Price Increase In Sri Lankaஅதிக அளவிலான இளநீர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வறண்ட காலநிலை அதிகரித்தால் இளநீர் ஒன்றின் விலை முந்நூறு ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் சில்லறை விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.