இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

ஒரு இலட்சத்து 57, 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

இந்த ஏல விற்பனை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு | Central Bank New Announcement

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.