தாய்க்கு உணவு வழங்க சென்ற மகனுக்கு நேர்ந்த கதி

தாய்க்கு உணவு வழங்க சென்ற மகனுக்கு நேர்ந்த கதி

செவனகல நெலும்வெவ பகுதியில் வசித்து வரும் இளைஞன் ஒருவர், தனது தாய்க்கு உணவளிக்க செல்லும் போது, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில், சுகவீனமுற்றிருந்த தனது தாய்க்கு உணவு கொடுப்பதற்காக தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இதன்போது, தாயின் வீட்டில், நாய்களிடமிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தாய்க்கு உணவு வழங்க சென்ற மகனுக்கு நேர்ந்த கதி | Son Tragedy As He Went Deliver Food To His Mother

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.