மக்களுக்கு பெப்ரவரியில் காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த திட்டத்தின் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்போது, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, Govpay திட்டம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.