நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையதினம் (4) மதுபானசாலைகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின விழாவை எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள
இந்த சுதந்திர தின நிகழ்விற்காக அரசாங்கம் 80 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை சுதந்திர தின அணிவகுப்பில் 4,421 ஆயுதப்படை மற்றும் பொலிசார் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
மேலும், 2,052 இராணுவத்தினர், 668 கடற்படையினர், 776 விமானப்படையினர், 549 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், 370 சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் 550 தேசிய கெடட் படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.