26 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

26 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

2025 ஆம் ஆண்டின் முதல் 26 நாட்களில் 200,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Srilanka) வருகை தந்துள்ளனர்.

இங்கிலாந்து (England), ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இந்த விடயம்  இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களில் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனவரி 26, 2025 வரை இலங்கை 212,838 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

26 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் | Tourists Visited To Sri Lanka In First 26 Days

அதன்படி, இந்த எண்ணிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 208,253 வருகைகளை மிஞ்சியுள்ளது.

இதற்கிடையில், ஜனவரி இரண்டாவது வாரத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 57,473 வருகைகளும், முதல் வாரத்தில் 54,853 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.