
வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை நிறுத்தம்
பொதுத் தேர்தல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்காக பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஈடுபடவுள்ளமையினால் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மீண்டும் 8ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கையர்கள் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், கட்டார், ஓமான், பஹ்ரேன், மலேசியா, மாலைத்தீவு மற்றும் இந்தியா உட்பட நாடுகளில் உள்ள இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.