சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் அதிரடிப்படையினர்

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் அதிரடிப்படையினர்

கொழும்பு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஈடுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் குறித்து  உத்தியோப்பூர்வ  அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட வேண்டுமென  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது வெலிக்கடை, மெகசின், கொழும்பு மற்றும் ரிமான்ட் சிறைச்சாலைகள் மற்றும் பெண்கள் சிறைப் பிரிவுகள் ஆகியவற்றுக்கு இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று புஸ்ஸ மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஈடுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாளை நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு கடமைகளில் 69,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பொது தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.