அனுராதபுர மக்களின் குருதியில் ஈயம்: ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

அனுராதபுர மக்களின் குருதியில் ஈயம்: ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களின் குருதியில் ஈயம் அடங்கி இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாடு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருந்துவர் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களின் குருதியில் ஒரு டெசிலீடருக்கு 3.9 மைக்ரோ கிராம் அளவில் ஈயம் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக இந்த மக்களுக்கு சுவாச குழாய் உபாதை, சிறுநீரகம் செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றது.

குருதியில் ஈயம் காணப்படுவது காரணமாக பிள்ளைகளின் அறிவு மட்டமும் குறைவடையும்.

உணவு, குடிநீரில் உள்ள ஈயமே இவ்வாறு குருதியில் கலந்துள்ளது என ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை தெரிவு செய்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நபர்களை தெரிவு செய்து இந்த பரிசோதனைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.