வாகன இறக்குமதியில் உருவான சர்ச்சையை உடைத்தெறிந்த அரசாங்க தரப்பு

வாகன இறக்குமதியில் உருவான சர்ச்சையை உடைத்தெறிந்த அரசாங்க தரப்பு

வாகன இறக்குமதிக்கான வரியில்லா அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு வரி இல்லாத வாகன உரிமங்கள் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்பட்டு மட்டுமே உள்ளதாகவும் உரிமங்கள் ரத்து செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, வாகன அனுமதிப்பத்திர சலுகையை ரத்து செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதியில் உருவான சர்ச்சையை உடைத்தெறிந்த அரசாங்க தரப்பு | Duty Free Permit Of Vehicle Import Sri Lanka

தொடர்ந்தும் அமைச்சர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “ இறக்குமதிக்கான வரியில்லா அனுமதிப்பத்திரத்திற்கு தகுதியுடையவர்களுக்கு சலுகைகளை மறுக்க அரசாங்கம் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.

அவர்களுக்கு நியாயமான சம்பளம் அல்லது சலுகைகள் இல்லாததால், சில நேரங்களில் அவர்களுக்கு அனுமதிகள் அல்லது பிற சலுகைகள் மறுக்கப்படுகின்றன.

புள்ளிவிபரங்களின் படி, வருடத்திற்கு வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சுமார் பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை காட்டுகின்றன.

வாகன இறக்குமதியில் உருவான சர்ச்சையை உடைத்தெறிந்த அரசாங்க தரப்பு | Duty Free Permit Of Vehicle Import Sri Lanka

இந்த நிலையில், அந்நியச் செலாவணி இருப்புக்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு அனுமதிகளை அனுமதித்தால், இந்த ஆண்டு நாம் குறிப்பிட்ட பொருளாதார இலக்கை அடைய முடியாது.

எனவே, இது முன்னுரிமைகள் சார்ந்த விடயம் அல்ல, ஆனால் விஞ்ஞாபன ரீதியான விடயமாக அதை ரத்து செய்ய ஒரு முடிவு எடுக்கப்படவில்லை."என தெரிவித்தார்.