இலங்கை மக்களுக்கான எச்சரிக்கை ; சட்டவிரோத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

இலங்கை மக்களுக்கான எச்சரிக்கை ; சட்டவிரோத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

கொழும்பு புறக்கோட்டை கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று, உரிய ஆவணங்களின்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இச்சம்பவம், பொதுமக்களின் மற்றும் நலனை உறுதிசெய்யும் நோக்கில் அதிகாரிகள் மேற்கொண்ட தகுதியான நடவடிக்கையாகும்.

இலங்கை மக்களுக்கான எச்சரிக்கை ; சட்டவிரோத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல் | Illegal Drugs And Cosmetics Seized In Colombo

தவறான மற்றும் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க, மக்களும் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.

இந்த சம்பவம், சந்தையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் செயல்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்பதை வெளிக்காட்டிநிற்கின்றது.