ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்! அதிகரிக்கப் போகும் டொலரின் பெறுமதி
வாகன இறக்குமதிக்கு தீர்வையில்லா அனுமதி பத்திரங்கள் எனிமேல் வழங்கபட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தீர்வையற்ற வாகன அணுகலுக்கு அரச ஊழியர்கள் உட்பட 20000 பேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கும் போது வாகன விலைகள் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாகன இறக்குமதி 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், 2018 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக சுமார் 2 பில்லியன் டொலர்களும், 2019 ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் டொலர்களும் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
டொலர் மதிப்பு 190 ரூபாவை இருந்தபோது, டொலர் மதிப்பு 300 ரூபாவை நெருங்கும்போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு டொலர்களை ஒதுக்கலாம் என்பது குறித்து மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மிகப்பெரிய உயர்வு ஏற்படக்கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, ஆரம்பத்தில் வாகன விலைகள் அதிகரிக்கும் என அவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.