பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
பிரித்தானிய (United Kingdom) மக்களுக்கு பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்தநிலையில், மணிக்கு 100 மைல் வேகத்தில் இயோவின் (Eowyn) புயல் வீசக்கூடும் என்பதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு புயல் பிரித்தானியாவில் ஏற்படவில்லை என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், ஸ்கொட்லாந்தில் நாளை (25) வெள்ளிக்கிழமை தொடருந்து சேவைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தொடருந்து பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து சேவைகள் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரித்தானியாவின் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மஞ்சள் மற்றும் அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஸ்கொட்லாந்தின் தலைநகரில் உள்ள பாடசாலைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் நாளை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் காரணமாக நாளை அயர்லாந்துக்குச் செல்லும் விமானங்களும் இரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.