பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி பல் துலக்க அல்ல! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி பல் துலக்க அல்ல! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய வாக்குப் பெட்டிகளை கொள்ளையிடவோ, மாற்றவோ முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டிருப்பது பல் துலக்க அல்ல என்பதை வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

வாக்குப் பெட்டிகளை மாற்றுகின்றனர், பெட்டிக்குள் வேறு வாக்குச் சீட்டுக்களை போகின்றனர் என்று எவரும் கூறலாம். இது பொய்.

இது பிள்ளைகள் சாப்பிட மறுக்கும் போது சாப்பாட்டை பூச்சாண்டி எடுத்துச் செல்வான் என்பது போல மக்களுக்கு கூறும் கதை

நாற்பது ஆண்டுகளாக எந்த தேர்தலில் இப்படியான ஒன்றுக்கு நாங்கள் இடமளித்ததில்லை. கோடாளிகளில் தாக்கி, துப்பாக்கியை காட்டி வாக்கு போட்ட சம்பவங்களும் நடந்துள்ளன

தற்போது எவரும் அப்படி செய்வதில்லை. அப்படி செய்தால், நாங்கள் வாக்குச் சாவடியில் வாக்களிப்பை நிறுத்துவோம்.

அத்துடன் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது பல் துலக்க அல்ல என்பதை நாங்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளோம் எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.