தமிழர் பகுதியில் யானையை கண்டு பீதியடைந்து உயிரை காப்பாற்ற ஆற்றில் வீழ்ந்த தந்தை - மகன்!

தமிழர் பகுதியில் யானையை கண்டு பீதியடைந்து உயிரை காப்பாற்ற ஆற்றில் வீழ்ந்த தந்தை - மகன்!

மட்டக்களப்பில் தந்தையும், மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பியோடி ஆற்றில் வீழ்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்றையதினம் (04-01-2025) காலை மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் யானையை கண்டு பீதியடைந்து உயிரை காப்பாற்ற ஆற்றில் வீழ்ந்த தந்தை - மகன்! | Father Son Fell Into The River Elephant Batticaloa

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்துள்ளனர்.

இதன்போது, தந்தையை நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

தமிழர் பகுதியில் யானையை கண்டு பீதியடைந்து உயிரை காப்பாற்ற ஆற்றில் வீழ்ந்த தந்தை - மகன்! | Father Son Fell Into The River Elephant Batticaloa

மயிலவெட்டுவான் ஊப்போடை வீதியைச் சோந்த 49 வயதுடைய ஞானப்பிள்ளை அரணாகரன் என்பவரே இவ்வாறு நீரில் அழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த தந்தையும் அவரது 14 வயதுடைய மகனும் காட்டையண்டிய பகுதியில் விறகு வெட்டி வருவதற்காக சம்பவதினமான காலை 9.00 மணியளவில் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு யானையை கண்டு அதில் இருந்து தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள முந்தனையாற்றில் குதித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் யானையை கண்டு பீதியடைந்து உயிரை காப்பாற்ற ஆற்றில் வீழ்ந்த தந்தை - மகன்! | Father Son Fell Into The River Elephant Batticaloaஇதனையடுத்து நீரிழ் மூழ்கிய 14 வயது சிறுவன் வெளியில் வந்த நிலையில் தந்தையார் நீரில் இருந்து வெளிவராததையிட்டு தேடிய போது, அவரை ஆற்று நீர் இழுத்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளதையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் கடற்படை உதவியுடன் உறவினர்கள் அந்த ஆற்றுப் பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியானாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.