
மட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது!
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பதவியில் இருந்து இடை நிறுத்திப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது
திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த கடமையில் இருந்து இடை நிறுத்திப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் முருகன்சிலையை கைப்பற்றியுள்ள சம்பவம் நேற்று (திங்கட்கிழமை ) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஜம்பொன்னிலான முருகன் சிலையை கடத்தி வந்து விற்க முயன்றபோது ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
பொலிஸ் உத்தியோகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட திருகோணமலை முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும். புதையலில் இருந்து கிடைத்த சிலை எனவும் அதனை ஒரு நண்பர் தந்தாகவும் இதனை விற்பதற்காக மட்டக்களப்பிற்கு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.