
இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தம்
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத்தேர்தல் கடமைகளில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் ஈடுபடவுள்ளமையால் வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும். இதன்போது துபாயிலுள்ள 660 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாலைதீவு, அவுஸ்திரேலியா, கட்டார், ஓமான், பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.