பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு அருகில் நின்ற மகன் பரிதாப மரணம்

பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு அருகில் நின்ற மகன் பரிதாப மரணம்

இரத்தினபுரி -  கொடகவெல பகுதியில் மரக்கிளையொன்று விழுந்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். 

நேற்று(11) பிற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் தந்தையும் மற்றுமொரு நபரும் இணைந்து பலா மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த போது, மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த சிறுவனின் தலையில் விழுந்துள்ளது.

பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு அருகில் நின்ற மகன் பரிதாப மரணம் | Boy Dies After Tree Falls On Him

இதன்போது படுகாயமடைந்த  நிலையில் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தின் போது, கொடகவெல பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்ததுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.