யாழில் மேலுமொருவரை பலியெடுத்த மர்ம காச்சல்; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையைச் சேர்ந்த மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று (12) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 47) என்ற நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.