யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பரவிவரும் மர்மக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (10-12-2024) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம் | Young Mother Die Mysterious Fever Spreading Jaffna

இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகிறது என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

யாழ்.பருத்தித்துறையில் உள்ள கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த 33 வயதான சுரேஷ்குமார் ரஞ்சிதா எனும் ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம் | Young Mother Die Mysterious Fever Spreading Jaffnaதொடர்ச்சியான காய்ச்சலால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09-12-2024) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு அவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நேற்று (10-12-2024) முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அவரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம் | Young Mother Die Mysterious Fever Spreading Jaffnaகுறித்த பெண்ணின் சுவாசத் தொகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உண்ணிக் காய்ச்சல் அல்லது எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.

இருப்பினும், எவ்வாறான நோயால் அவர் உயிரிழந்தார் என்பது கொழும்பில் இருந்து பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.