பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளுக்கு அனுப்பும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இதற்காக பிராந்திய செயலக மட்டத்திலான திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கிராம மட்டத்தில் மாணவர்களை தொழிற்பயிற்சி நெறிகளுக்கு வழிநடத்துவதற்கு அந்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் தற்போது  பெண்களுக்காக சுமார் 1500 தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பெரும்பாலான கற்கைநெறிகள் இலவசமாக நடத்தப்படுவதாகவும்,  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் | Special Program For Students Vocational Training

மேலும், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு தேசிய தகைமைச் சான்றிதழ் (NVQ) வழங்கப்படும் எனவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் அந்தச் சான்றிதழ் செல்லுபடியாகும் எனவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்