யாழ். குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

யாழ். குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அண்ணளவாக 60 வீடுகளுக்குள் இவ்வாறு வெள்ள நீர் புகுந்துள்ளதால் அவர்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது வெள்ளநீர் வடிந்தோடிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் 2024 ஜனவரி தொடக்கம் டிசம்பர் 19 வரை 83 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் | Heavy Rain Falls In Jaffnaவவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1400 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 994.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், வருகின்ற 40 நாட்களிற்குள் 300 மில்லி மீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியே பதிவாகும்.

இந்த வருடம் குறிப்பிட்ட காலப்பகுதியிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இனிவரும் காலப்பகுதியில் பெய்யும் மழை சாதாரண மழையாகவே காணப்படும். நவம்பர் இறுதி, டிசம்பர் மாதங்களில் மழை அதிகமாக காணப்பட்டாலும் சராசரி மழைவீழ்ச்சியாகவே காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.