யாழில் விபத்தில் பறிபோன குடும்பஸ்தர் உயிர்

யாழில் விபத்தில் பறிபோன குடும்பஸ்தர் உயிர்

மானிப்பாய் - கைதடி பிரதான வீதியில் நேற்று (11) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் அரசடை வீதி வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் விபத்தில் பறிபோன குடும்பஸ்தர் உயிர் | A Family Member Who Lost His Life Accident In Yaliகுறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை முந்திச் செல்வதற்கு முயற்சித்தார்.

இதன் போது மோட்டார் சைக்கிளுடனும் மோதி, கிளுவை மரத்துடனும் மோதி விபத்து சம்பவத்துள்ளது. உயிரிழந்தவரின் சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்லதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.