யாழில் தொடர் காய்ச்சலால் குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில்சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (05) உயிரிழந்துள்ளார்.
துன்னாலை கிழக்கு, குடவத்தனை பகுதியைச் சேர்ந்த கதிரமலை லட்சணம் (வயது 68) என்ற 6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு கடந்த 3 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 4ஆம் திகதி மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (05) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.