யாழில் மதுபோதையில் நடமாடும் பெண் யாசகர்கள்
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் கடைகளுக்கு முன்னால் ஏராளமான பெண் யாசகர்கள் உறங்கும் நிலையில், அவர்களில் பலர் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது பிள்ளைகளைப் பயன்படுத்தியும் துன்புறுத்தியும் யாசகம் எடுத்துவிட்டு அந்தப் பணத்தை அடாத்தாகப் பறித்து மதுபானத்தைக் கொள்வனவு செய்து பருகுகின்றனர் என்றும் பொலிஸாரிடம் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த யாசகர்களைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணம் மாநகர சபை முறையான நடவடிக்கைகள் எதையும் எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.