பாணந்துறையில் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்த ஐந்து இரண்டுமாடிக்கட்டிடங்கள்

பாணந்துறையில் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்த ஐந்து இரண்டுமாடிக்கட்டிடங்கள்

களுத்துறை - பாணந்துறை நகரின் பிரபலமான வீதியில் வரிசையாக அமைந்துள்ள 05 பழைய இரண்டுமாடிக் கட்டிடங்கள் இன்று (30) பிற்பகல் ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளன.

குறித்த பகுதியின் வீதியின் இருபுறங்களிலும் வடிகால் அமைப்பு தயாரிப்பதற்காக மாநகர சபையினால் ஒப்பந்ததாரர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்று (30) பிற்பகல் முதல் பெக்ஹோ இயந்திரத்தின் உதவியுடன் வடிகால்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், பெக்ஹோ மற்றும் மண் நிரப்பப்பட்ட லொறி ஆகிய கனரக வாகனங்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறியவுடன், குறித்த கட்டிடங்கள் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்துள்ளன.

பாணந்துறையில் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்த ஐந்து இரண்டுமாடிக்கட்டிடங்கள் | Five Old Buidings Were Destroyed Simultaneouslyபெக்ஹோ இயந்திரத்தால் ஏற்பட்ட அதிர்வே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

மேலும், ஐந்து கட்டிடங்களின் கீழ் தளங்களில் பல் அறுவை சிகிச்சை மற்றும் ஒரு ஜவுளி கடை உள்ளிட்ட பல வர்த்தக நிலையங்கள் இருந்துள்ள நிலையில் அவை முற்றிலும் சேதமாகியுள்ளன.

அத்துடன், விபத்தின் போது அந்த ஐந்து வர்த்தக நிலையங்களில் இரண்டு மாத்திரமே திறந்திருந்ததாகவும் ஏனைய மூன்றும் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்தின் போது நபர்கள் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.