யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம்

யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம் | Teacher Blindly Attacked The Student In Jaffna

இரண்டு மாணவர்களுக்கு இடையில் புத்தகப் பை குறித்து இழுபறி ஏற்பட்டதாகவும் ஒரு மாணவனை அழைத்த ஆசிரியர் தாறுமாகத் தடியாலும் கைகளாலும் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த ஆசிரியர் புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான பாடம் கற்பிப்பவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரியவந்துள்ளது.

இதையடுத்து கோப்பாய் பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

யாழில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்! அதிர்ச்சி சம்பவம் | Teacher Blindly Attacked The Student In Jaffnaஎனினும், அந்த ஆசிரியரை நீதிமன்றத்திற்கு செல்லவிடாது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது.

குறித்த ஆசிரியரை இன்று (29-09-2024) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.