காணாமற்போனவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு
தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்படுவார் என யாழ்ப்பாணம்(jaffna) நாவாந்துறையில் இன்று(14) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தியும் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இல்லையேல் ஏனைய மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னோக்கி செல்லும் போது வடக்கு பின்தங்கிவிடும் எனவும் வடக்கின் அரசியல் பிரச்சினைகளை மட்டுமன்றி அபிவிருத்தி பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களை தான் அச்சுறுத்தியதாக குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்கவை(anura kumara dissanayaka) சுமந்திரன்(m.a.sumanthiran) பாதுகாத்தாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அநுர(anura), சஜித்(sajith) சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர். அவ்வாறு செய்தால் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது . வாழ்க்கை செலவை குறைப்பதே எமது முதலவாது குறிக்கோள்.அஸ்வெசும நிகழ்ச்சி திட்டம்.உர மானியம். வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் சம்பளத்தை அதிகரிக்க முடியும். வரியையும் குறைக்க வழிசெய்ய முடியும்.
அநுர, சஜித் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் வரியை குறைக்க வேண்டும் என கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் மேலும் பல பாதிப்பை சந்திக்க நேரிடும்.
இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள். சலுகைகளை வழங்க வேண்டும். முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும். தனியார் துறையிலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க உள்ளோம்.சுய தொழில் முயற்சியாளருக்கு வட்டியில்லா கடன்களை வழங்க வேண்டும்.
காங்கேசன்துறை(kankesanthurai) பிரதேசத்தில் முதலாவது முதலீட்டு வலயம் உருவாக்கப்படவுள்ளது. தொடர்நது பரந்தன், மாங்குளத்தில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படும். பூநகரி பிரதேசத்தில் சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்படும். சஜித், அநுரவிடம் தீர்வுகள் இல்லை. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.